உலகம்சூடான செய்திகள் 1

உலகளவில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது

(UTV | ஸ்விட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 363 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 597,262 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 27,365 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 23 ஆயிரத்து 559 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 363 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

Related posts

உக்ரைன் பிரதமர் இராஜினாமா

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்

மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது