உலகம்

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,792,253 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,498,730
ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸினால் 357,467 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் பாதிப்பு ஒரு இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை – ரஷ்ய ஜனாதிபதி புடின்

editor

டுவிட்டர் தளம் முடங்கியது

இந்தியாவினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்