(UTV|கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கியது.
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 170,439
நெருங்கியுள்ளதுடன், தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 81 ஆயிரத்து 541பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி (காலை 9.30) கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா – 42,517
ஸ்பெயின் – 20,852
இத்தாலி – 24,114
பிரான்ஸ் – 20,265
ஜெர்மனி – 4,862
இங்கிலாந்து – 16,509
துருக்கி – 2,140
ஈரான் – 5,209
சீனா – 4,632