வகைப்படுத்தப்படாத

உலகமே எங்களைக் காப்பாற்று… சமூக வலைதளங்களில் உதவி கேட்கும் சிரியா சிறுவர்கள்!

(UTV|SYRIA)-சிரியாவில் தீவிரமாகி வரும் உள்நாட்டுப் போரில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்படுவதால் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சிறுவர்கள் சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளனர். சிரியாவின் குவாட்டா 2013 முதல் ஆசாத் படைகளின் வசம் உள்ளது, கடந்த 2 வாரங்களாக இந்தப் பகுதிகளில் கடுமையான உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் படையிடம் இருந்து குவாட்டா பகுதியை மீட்பதற்காக அதிபர் அல்ஆசாத் படைகள் பீயங்கரமான அணுகுண்டுகளை வீசி வருகிறது. குவாட்டாவில் திரும்பிய திசையெங்கும் இடிந்த கட்டிடங்கள், இறந்த மனித உடல்கள் என்று போரின் கோரத்தாண்டவ காட்சிகளை வெளிக்காட்டுகின்றன. குவாட்டாவின் அவல நிலையை சிறுவர்கள் பலர் முகநூலில் வீடியோவாக பதிவிட்டு உதவியை நாடி வருகின்றனர்.

15 வயது சிரிய நாட்டு சிறுவன் முகமது நஜீம், குவாட்டாவின் அழிவை புகைப்படங்கள், வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் இந்தச் சிறுவன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய பள்ளி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சிரிய அதிபர் அல் ஆசாத்தின் போர்குற்றங்களுக்கு பலியாகியுள்ளதாக

சிறுவன் நஜீமின் பதிவுகள் கிழக்கு குவாட்டாவின் தற்போதைய நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. குவாட்டா மக்களின் அமைதியான வாழ்க்கை கபளீகரம் செய்யப்பட்டு விட்டதாகவும், உலக நாடுகள் தங்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் நஜீம் குற்றம்சாட்டுகிறார்.

குண்டுவீசி நடத்தப்பட்ட தாக்குதலில் தன்னுடைய நண்பனும், அவனது குடும்பத்தாரும் உயிரிழந்துவிட்டதாக நஜீம் உருக்கத்துடன் தெரிவிக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடி இருக்கிறோம் ஆனால் இன்று எனது நண்பன் இல்லை நான் மட்டுமே இங்கு இருக்கிறேன் என்று கூறியுள்ளான் நஜீம்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஷ்ய தூதுவராலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி

குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை