உள்நாடு

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் (Aloe Blacc) இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ள அவர், அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் பிரதான பங்கை வகிக்கிறார்.

ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிரேஸ்ட ஆலோசகர், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில், இலங்கையில் சுகாதாரத் துறையில் முதலீட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக எலோ பிளாக் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய ஆகியோர் வரவேற்றனர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

editor

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது