சூடான செய்திகள் 1விளையாட்டு

உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து

(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்ரேலிய அணியை எதிர்கொண்டது.

இதன் போது 51:52 என்ற புள்ளி அடிப்படையில் நியூசிலாந்து அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. 16 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டித்தொடர் இங்கிலாந்து லிவர்பூலில் இடம் பெற்றது.

இந்த போட்டியில் 3ஆம் இடத்திற்கு இங்கிலாந்து அணி தெரிவாகி உள்ளதுடன் இலங்கை அணிக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது.

அடுத்த உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி தென் ஆபிரிக்காவில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி