விளையாட்டு

உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு – 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

8 ஆவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த வருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ளதுடன், இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

குறித்த இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடைபெறவிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.

Related posts

காற்பந்து விளையாட்டு ஜாம்பவன் பீலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

வைரலாக பரவும் ஹர்பஜனின் வீடியோ… (VIDEO)

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji