விளையாட்டு

உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா [PHOTOS]

(UTVNEWS | AUSTRALIA) -சர்வதேச மகளிர் இருபதுக்கு – 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 85 ஓட்டங்களினால் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி சாம்பியன் ஆகியுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அலிஸா ஹெலி 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களையும், பெத் மூனி 58 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வீராங்கனைகள் ஒருவர் பின் ஒருவராக சொப்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்தியா 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. இந்திய  அணி சார்பில் தீப்தி சர்மா மாத்திரம் அதிகபடியாக 33 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக அலிஸா ஹெலியும் தொடரின் சிறந்த வீராங்கனையாக பெத் மூனியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Related posts

உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்

எந்தவொரு மனிதனுக்கும் கடினமான நேரங்கள் வரலாம் – வனிந்து ஹசரங்க.

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்