உள்நாடுசூடான செய்திகள் 1

உறுதியான ஈரான் ஜனாதிபதியின் வருகை: அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடு

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகைக்காக அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்தளையிலிருந்து உமாஓவா வரையிலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையான 172 கிலோமீற்றர் தரைவழியான பயணத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் பலத்த பாதுகாப்பை நிலைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி, நாளை காலை மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளார்.

அங்கிருந்து தரை மார்க்கமாக 141 கிலோமீற்றர் தூரம் சென்று உமாஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் மத்தளைக்கு வந்து விசேட விமானம் மூலம் மத்தளையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு செல்லவுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் கொழும்பு சென்றடைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் தரைவழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பும் ஈரான் ஜனாதிபதி, நாளைய தினமே நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் முப்படையினரின் பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் வழங்குவார்கள் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்

மீண்டும் எகிறும் மின்கட்டண சுமை

மொரட்டுவை நகர சபை தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு