உள்நாடுபிராந்தியம்

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

மகனால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (01) இச்சம்பவம் உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகொலனி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடப்பு, ஆதிமுனையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பெரியகொலனி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சுகயீனம் காரணமாக உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக உடப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சடலத்தை பரிசோதித்த தடயவியல் வைத்தியர் இது சந்தேகத்துக்கிடமான மரணம் என்பதால் நீதிமன்ற விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் உயிரிழந்த நபர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரின் மகன் தனது தந்தையை மார்புப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாகவும் இந்த மரணம் கொலை எனவும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

குற்றத்தைச் செய்த சந்தேக நபரான 20 வயதுடைய மனநலம் குன்றிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கை வழமைக்கு

கியூ.ஆர்  முறைமையிலான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும்!

கொரோனா வைரஸ் – விசேட கூட்டம் ஆரம்பம்