உள்நாடு

உருமாறிய கொரோனா : 02 முகக்கவசங்களை பயன்படுத்தவும்

(UTV | கொழும்பு) – இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கொவிட் 19 வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் பின்னர் எந்தளவு இந்த வைரஸ் பரவியுள்ளதென ஒரு முடிவிற்கு வர முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய கொவிட் 19 வைரஸ் மாறுபாடு மிகவும் வேகமாக பரவக் கூடும் என்பதனால் அதில் இருந்து தப்புவதற்கு இரண்டு முகக்கவசங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பாகும்.

தற்போதும் மக்கள் இரண்டு முகக்கவசம் அணிவது நல்லது. அவ்வாறான முறையில் கொவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து அதிகம் பாதுகாப்பு கிடைக்கும்.

பிரித்தானியாவில் தோற்றம் பெற்றுள்ள உருமாற்றம் பெற்ற கொவிட் 19 வைரஸ், சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து முதல் முறையாக பரவிய கோவிட் வைரஸை விடவும் நூற்றுக்கு 56 – 75 வீதத்தில் வேகமாக மக்களுக்கு மத்தியில் பரவ கூடியதாகும் என அவர் மேலும் அதெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுமக்களுக்கான அறிவித்தல்

“நோர்வே தூதரகங்களை மூடுவது எளிதான முடிவு அல்ல”

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா-அவுஸ்திரேலியா ,மோதல்.