உள்நாடு

உரத்தை உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தினை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், உர இறக்குமதியின்போது எழும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உரத்தை விநியோகிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் நியமங்களைப் பரிசீலனை செய்யும் அறிக்கையை எதிர்வரும் 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Related posts

மேலும் 103 பேருக்கு கொரோனா

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு