உள்நாடு

உயிர்த ஞாயிறு: நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், நாளை பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதிலும் உள்ள பொலிஸ் களங்களில் அமைந்துள்ள 1873 கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும்.

மேலும் அந்த தேவாலயங்கள் மற்றும் தொடர்புடைய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக 6522 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 2746 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

இனரீதியான பழிவாங்கலா இடம்பெறுகின்றது? – றிஷாட் பாராளுமன்றில் கேள்வி