அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : விசாரணை மேற்கொள்வதற்கு குழு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் விசாரணை மேற்கொள்வதற்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்கள்

பிரதி பொலிஸ்மா அதிபர் – குற்றப் புலனாய்வு திணைக்களம்

பணிப்பாளர் – குற்றப் புலனாய்வு திணைக்களம்

பணிப்பாளர் – பயங்கரவாத விசாரணைப் பிரிவு

Related posts

இ.தொ.கா வின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

editor

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு