உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுமார் 04 மணி நேர வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – சுமார் 04 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியேறினார்.

—————————————————————-[UPDATE] @12:22 PM

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

—————————————————————-[UPDATE] @08:22 AM

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று(31) முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு கடந்த 21ஆம் திகதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், குறித்த தினத்தில் தனக்கு முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 31ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மறைந்த ரொனி டி மெல் உக் – ஜனாதிபதி இறுதி அஞ்சலி