உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21ம் திகதி 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்படி, 21ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி முதல் 8.47 மணி வரை மெளனமாக இருக்க அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

முகக்கவசம் அணியத் தவறிய நபர்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?