உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; உதவிய இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) –உயிரித்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சினமன் கிராண்ட் ஹோட்டல் மற்றும் கொச்சிக்கடை தேவாலயம் ஆகிய இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் ஏனைய உதவிகளை செய்துள்ளதாக தெரிவித்து குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related posts

கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி!

நான் இருந்திருந்தால் சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன் – டக்ளஸ் தேவானந்தா

editor

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor