சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இது தொடர்பான மற்றுமொரு சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

ரெயில்வே வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு