சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று விசாரணைகளை ஆரம்பித்தது.

இன்றைய விசாரணைக்கு பல உயர் அதிகாரிகள் இன்று சாட்சியம் வழங்க உள்ளனர்.

முதலாவதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினருக்கு, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவருக்கு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்

இன்று (10) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.