சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 23 கோடி ரூபா இழப்பீடு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சம்பவங்களில் பலியான 184 பேரின் குடும்பத்திற்காக 18 கோடி பத்து லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேற்படி காயமடைந்த 481 பேரில் 387 பேருக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நான்கு கோடியே 95 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. சம்பவங்களில் பலியான 43 வெளிநாட்டவர்களுக்காக இதுவரையில் இழப்பீட்டுக்கான எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

சட்டவிரோதமான முறையில் ஆமை மற்றும் நண்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது

இலஞ்சம் பெற்ற போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு