உலகம்

உயிரே முக்கியம் ஒலிம்பிக் அல்ல

(UTV |  டோக்கியோ) – கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவது குறித்து ஜப்பான் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் என திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறையாத நிலையில் பல நாடுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை பரவல்களும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலைமையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் யொஷிஹிடே சுகா “இந்த இக்கட்டான சூழலில் மக்களின் உயிரை காப்பதே முக்கியம். என்னளவில் ஒலிம்பிக்கிற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Related posts

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி

உள் அரங்கங்களில் இனி முக கவசம் தேவையில்லை

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி