உலகம்

உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில்

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்று மாத்திரம் 28,400 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 59,430 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,638 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67,391 ஆக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நெல்சன் மண்டேலாவின் பேத்தி திடீர் மரணம்!

இந்தியாவின் தடுப்பூசிக்கு பிரேசில் திடீர் தடை

ஜனாதிபதியின் கொலையை தொடரும் பதற்றமும்