சூடான செய்திகள் 1

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் பதவியேற்பு

(UTV|COLOMBO)-உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும் இன்று(09) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவியேற்றுள்ளனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகர ஆகியோர் பதவியேற்றுள்ளதுடன், புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பீ பெர்ணான்டோ பதவியேற்றுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு