உள்நாடு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை!

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை விதித்து, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டத்தரணி ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை ஒக்டோபர் 4ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

 

Related posts

மேலும் இரு தினங்களுக்கு மழையுடனான வானிலை

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்