உள்நாடு

உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்தினால் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“1986ல் ஆண்டு இதே போன்று சம்பளம் உயர்த்தப்பட்டது. உயர் நீதினமன்றில் வழங்கு தொடுக்கப்பட்டு,  இப்படி அசமத்துவமாக நடத்த முடியாது என்று தீர்ப்பும் வந்துள்ளது.

அரசு இவ்வாறான கேவலமான வேலையை செய்ய அனுமதிக்க மாட்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

Related posts

அனைத்துக் கட்சி மாநாட்டுக்கான திகதி நிர்ணயம்

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்