சூடான செய்திகள் 1

உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடாக மாறியது இலங்கை

(UTVNEWS | COLOMBO) -இலங்கை உயர் நடுத்தர வருமானத்தை பெரும் நாடாக மாறியுள்ளது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா -கொரியா தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் இன்று எமது நாடு உயர் நடுத்தர பொருளதார மட்டத்தை அடைந்துள்ளது. உயர் நடுத்தர வருமானம் தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. அதற்கமைய ஆள்வீத வருமானம் 4000 டொலர்களாக அதிகரித்துள்ளது. இன்று உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடு என்ற நிலையை அடைந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடியவகை வெளிநாட்டு வருமானம், ஏற்றுமதி பொருளதாரம் என்பவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related posts

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை- நிதி அமைச்சு

மின்சார விநியோக பிரச்சினை-பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் கொண்ட குழு

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது