விளையாட்டு

உயர்த்தப்பட்ட சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை

(UTV|INDIA)-உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு சம்பளம்  உயர்த்தப்பட்டது.

இந்த சம்பள  உயர்வையே வீரர்கள் போராடிதான் பெற்றார்கள் என அப்போது கூறப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைப்பதில் குறியாக இருந்தனர்.

இந்நிலையில், நாளை இந்திய அணி இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்து 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி இன்னும் ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்று பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது. எனினும், வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டிக்கு எதிராக பொறுப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டு விவாதிக்க உள்ளனர். பொறுப்பு நிர்வாகிகளின் பொதுக்குழுவில் சம்பள ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில், நிர்வாக கமிட்டி ஒப்புதல் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் ஏபி டி வில்லியர்ஸ்?

பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து அணி

நான்காவது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி