உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள்

(UTV | கொழும்பு) – 2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டு, அதற்கமைய உயர்தர பரீட்சைகள் 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்நிலையிலேயே உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அதாவது எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

மேல்மாகாணத்தில் 376 பேர் கைது

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித