சூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி…

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்ப பத்திரங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த விண்ணப்ப பத்திரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக நிரப்பப்பட்டு மீள அனுப்பப்படவேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்ப பத்திரங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்ப பத்திரங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

எந்த காரணங்களின் அடிப்படையிலும் குறித்த தினங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உணவு விசமடைந்ததில் 31 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது