உள்நாடுகல்வி

 உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் – இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) –  உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் – இன்று  தீர்மானம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இன்று (25) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அவர்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என அதன் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்றி குறிப்பிட்ட பாடங்களின் விடைத்தாள்களை அரசாங்கம் சரிபார்ப்பது சிக்கலாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளமை கூறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

editor

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின்றது!