கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தவறான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.