உள்நாடுசூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை செப்டெம்பர் மாதம் நடத்த முடியும்.

பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

பெட்ரோல் குறித்து அரசின் தீர்மானம்