உள்நாடு

உபேக்ஷா சுவர்ணமாலி கைது

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா பயணித்த வாகனம் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட உபேக்ஷா சுவர்ணமாலி இன்று(26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு : 22 ஆம் திகதி பாராளுமன்றுக்கு

விபத்துக்குள்ளான ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம்

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்