சூடான செய்திகள் 1

உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதியதால் ஏற்பட்ட சோக சம்பவம்

(UTV|COLOMBO)-கொழும்பு கண்டி வீதியின் தெலியகொன்ன பகுதியில் உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் இரண்டரை வயது குழந்தை ஒன்றும் பெண்ணொருவரும் பலியாகினர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் குருணாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்ததாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் மாவத்தகம பரகஹதெனிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இரண்டு பேர் கைது

இடி தாக்கிய இருவர் டிக்கோயா வைத்தியசாலையில்…..