உள்நாடு

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.

(UTV | கொழும்பு) –

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அரச ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தமது இணக்கத்தை தெரிவிக்கும் எனவும் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த தீர்மானம் வரவேற்புக்குரியது என அதன் உப- தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முகம்மட் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 2016-2019 வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 2020 ல் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை நிலுவை எதுவுமின்றி 2024 ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மூலம் 01.01.2024 முதல் இரு கட்டங்களாக வழங்குவதற்கான ஏற்பாடு வரவு செலவுத் திட்டயோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் நம்பகமாக அறியக்கிடைத்தது.

தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. இது தொடர்பிலான வழக்கின் விவாதம் ஆரம்பித்துள்ளது. இதன் அடுத்த கட்ட விவாதம் எதிர்வரும் 15.02.2024 ம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அரச ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தமது இணக்கத்தை தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

’20’ வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]