உள்நாடு

உத்தியோகப்பூர்வ இல்லங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள அமைச்சர்கள் மூவரை வெளியேற்ற நடவடிக்கை!

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ இல்லங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள அமைச்சர்கள் மூவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் குடியிருப்பு வீடுகளை கையாளும் பிரிவு இது தொடர்பில் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த 03 அமைச்சர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அமைச்சரின் இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கியுள்ள நிலையில்அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாதிவெலயில் அமைச்சுக்களுக்காக ஒதுக்கபட்டுள்ள சில உத்தியோகப்பூர்வ இல்லங்களில் அமைச்சர்களின் நண்பர்கள், உறவினர்கள், மெய்ப்பாதுகாவலர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

டொலர் விற்பனையாளராக மத்திய வங்கி