கிசு கிசு

தாண்டவமாடிய அலி சப்ரி

(UTV | கொழும்பு) – நீதியமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் மிகவும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தமையானது பேசுபொருளாக வைரலாகி வருகின்றது.

கருக்கலைப்பு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஷாபி ஷிஹாப்தீனுக்காக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் யாரென எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வினவிய போதே அவர் இவ்வாறு ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார்.

அமைச்சர் தெரிவிக்கையில், நீதிமன்றில் நடப்பில் உள்ள வழக்கொன்று தொடர்பில் தன்னிடம் வினவுவது நியாயமானது அல்ல என தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், டை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்ரி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்ரி, எனக்கு விருப்பமான உடையை நான் அணிகின்றேன். என்ன பிரச்சினை? இங்கு இனவாதத்தை தூண்ட வேண்டாம், என கடும் கோபத்துடன் பதிலளித்தார்.

இதன் போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவான இவர், சண்டியன், ரவுடி போல் கோபத்துடன் நடந்து கொள்ளும் விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது புத்திஜீவி தனமா? அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இறுதியில் தான் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அமைச்சர் அலி சப்ரி மன்னிப்பு கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

1000 பெண்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்! உடந்தையான காதலி…

ரஞ்சனுக்கு மன்னிப்புகள் இல்லை : தொடர்ந்தும் சிறைக்கம்பிகள் இடையே..

விசேட வர்த்தமானி வெளியானது!