வகைப்படுத்தப்படாத

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி

(UTV|INDIA)-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையில் சிக்கி 18 பேர் பலியாகினர்.
இந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அபாய கட்ட அளவை தாண்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy apprehends 7 Indian fishers for poaching in Northern waters [VIDEO]

நவாஸ் ஷெரிப் மனைவி அறைக்குள் புகுந்த மர்ம நபர் கைது

කෘතීමව රා නිපදවන ස්ථානයක් වටලයි