உள்நாடு

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயல் வீட்டு நபரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெசாக் தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்கமாறு உத்தரவு

editor

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

editor