கிசு கிசு

உண்மையை வெளியிட்ட பிரபல நடிகை?

(UTV|COLOMBO) இலங்கையில் பிரபல சிங்கள நடிகை, சிலரினால் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் அந்தக் காணொளியில் தாக்குதலுக்கு உள்ளானது நான் தான் என நடிகை பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் என்னை சிலர் கொடூரமாக தாக்கினர் என அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது யாரோ அதனை இணையத்தில் கசிய விட்டுள்ளதாக ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதா என்பதை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த தாக்குதல் காணொளியை பார்வையிட்ட ராஜாங்க அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அதனை கண்டித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்திர இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனது பேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

கம்பஹா களத்தில் ரஞ்சன்

“மஹிந்தவை பதவி நீக்கியதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம்”

16 வயதில் கற்பழிக்கப்பட்ட மாடல் அழகி…