வணிகம்

உணவு வகைகளில் உள்ள போஷாக்கு தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

(UTV| கொழும்பு) – இலங்கையில் 50 பொதுவான உணவு வகைகளின் போஷாக்கு தரத்தை அளவிடுவதற்காக சர்வதேச மட்டத்தில் விசேட ஆய்வு அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் போசாக்கு பிரிவின் விசேட வைத்தியர் திருமதி ரெணுக்கா ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் ஆய்வு அறிக்கையை மே மாத இறுதிக்கு முன்னர் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், இதற்கு அமைவாக 50 உணவு பொருட்களை தெரிவு செய்து அவற்றில் அடங்கியுள்ள போஷாக்கு மற்றும் இரசாயன பொருட்கள் தொடர்பான நிலைமையும் கண்டறியப்படவுள்ளது.

சிவப்பு நாட்டரிசி, வெள்ளை அரிசி, நாட்டரிசி மற்றும் சம்பா போன்ற அரிசி வகைகள், மீன் வகைகள், காய்கறிகள், கருவாடு, பழங்கள், தேங்காய், எண்ணெய் வகைகள் போன்ற உணவு வகைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

வாகன இறக்குமதி துறையை பாராமரிக்கத் திட்டம்