சூடான செய்திகள் 1

உணவு ஒவ்வாமை காரணமாக 70 பேர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-கொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் நேற்று(22) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்களில் 60 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும், 10 பேர் வரை தங்கி சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உணவு ஒவ்வாமை எவ்வாறு ஏற்பட்டது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை

ஒரு மாதம் வரை நீடிக்கும் மின்சாரத்தடை…

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்