சூடான செய்திகள் 1

உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளால் வீணடிக்கப்படுகிறது

(UTV|COLOMBO)-உணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் நியமங்கள் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்படுதல் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (16) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச உணவு தின நிகழ்வுகளில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 16 ஆம் திகதி சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பினால் இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

“எமது செயற்பாடுகள் எமது எதிர்காலம் – 2030 ஆம் ஆண்டளவில் பட்டினியற்ற உலகம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுகின்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விவசாய நாடு என்ற வகையில் உணவு உற்பத்தி தொடர்பில் காணப்படும் நீண்டகால வரலாற்றிற்கமைவாக நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்த தேசமாக காணப்பட்டோம் எனத் தெரிவித்தார்.

ஆயினும் நமது நாட்டின் உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளினால் வீணடிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படும் வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் உணவு உற்பத்தியின் பெரும்பகுதி வீணடிக்கப்படுகின்றது. இந்த உணவு உற்பத்தியை பாதுகாப்பதற்கு உரிய செயற்திட்டமொன்று அவசியம் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்படும் விசேட உதவிகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டித்தொடரில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவ, மாணவியருக்கு இதன்போது ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் பைசல் காசிம், உலக உணவு அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் Brenda Bradon, உலக உணவு, விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Cnia Brandstrup உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவினர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…