வகைப்படுத்தப்படாத

உட பலாத்த உப பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமனம் வழங்கும் புண்ணியநிகழ்வு

(UTV|COLOMO)-விமலகீர்த்தி ஸ்ரீதம்மரத்தன நாமத்துடன் உட பலாத்த உப பிரதான சங்கநாயக்கர் பதவியளித்து கௌரவிக்கப்பட்டுள்ள வாரியகல ஸ்ரீ திஸ்ஸாராம விகாராதிபதி, தொலுவ பிரதேச சாசனப் பாதுகாப்பு சபையின் உப தலைவர், அகில இலங்கை சமாதான நீதவான் ஹெல்பொடகம சுகத்தீராபிதான நாயக்க தேரருக்கு நியமனப் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

கண்டி, கலஹா, வாரியகல ஸ்ரீ திஸ்ஸாராம விகாரையில் நேற்று நடைபெற்றது.

நேற்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டார்.

 

முன்னாள் பிரதமர் தீ.மு. ஜயரத்னவினால் புதிய உப பிரதான சங்க நாயக்கருக்கு சாசனப் பத்திரம் வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதி புதிய உப பிரதான சங்க நாயக்கருக்கு எண்வகை தானப்பொருட்கள் வழங்கி ஆசிர்வாதம் பெற்றார்.

 

ஹெல்பொடகம சுகத்தீராபிதான நாயக்க தேரர் இதன்போது ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

 

தர்ம போதனைகளை ஆற்றுவதில் சிறந்து விளங்கும் தேரர் பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டி ஷியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரிய பிரிவினரால் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வில் பொலன்னறுவை அஸ்கிரி கெடிகே விகாராதிபதி, அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அனுநாயக்க வண. வெடருவே உபாலி நாயக்க தேரர், ஹிந்தகல ரஜமகா விகாராதிபதி வண. எம்பில்மீகம பஞ்ஞாகித்தி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, முதலமைச்சர் சரத் ஏகநாயக்க மற்றும் மக்கள் பிரநிதிகள் பலரும், பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…