வகைப்படுத்தப்படாத

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – உடுவே தம்மாலோக தேரரை கைது செய்ய நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த தேரர் வசிக்கும் கொழும்பு 05 எலன் மெதினியாராம விகாரையினுள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெக்கியை இயக்கியமைக்கு எதிராக பிரதேசவாசிகள் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2 முறை இந்த வழக்கில் முன்னிலையாகுமாறு உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

காலஞ்சென்ற ஊடகவியலாளருக்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டம் – ஊடகத்துறை அமைச்சர் கோரிக்கை