உள்நாடு

உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

(UTV|கொழும்பு) – நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோய் நிலைமைக்கு உட்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையில் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில் நடமாடுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் நேரடியாக கடும் சூரிய ஒளியின் தாக்கத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான சூரிய வெப்பம் காணப்படும் நேரத்தில் பாடசாலை மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Related posts

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor

இன்றைய தினத்தில் இதுவரை தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு வந்த குடும்பம் பயணித்த வாகனம் விபத்து