உள்நாடு

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

(UTV| கொழும்பு) – ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அது கடற்படை முகாம்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பொது மக்களின் வசிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கி கடற்படை முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வருவதோடு கடற்படை தலைமையகத்திலும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

editor

எகிப்து பிரதமரை சந்தித்த ருவன் விஜேவர்தன!

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!