உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – கடந்த 14 நாட்களுள் வியட்நாமுக்கு சென்ற அனைத்து விமான பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்திய மற்றும் பிரித்தானிய கொரோனா வைரஸ்களின் கலப்பு வைரஸ் ஒன்று, கடந்த தினம் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் (Transit) பயணிகள் எவருக்கும் இவ்வாறு தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா