உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் முடங்கிய பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) –  நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம் :
ரக்வானை காவல்துறை அதிகார பிரிவு –
தொலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இழும்பகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்.

கலவானை காவல்துறை அதிகார பிரிவு – பனாபொல, குடுமிட்டிய, குடவ, தெல்கொடை கிழக்கு, மேற்கு, தவ்கலகம, தண்டகமுவ, கொஸ்வத்தை, தப்பஸ்ஸரகந்த, வதுராவ, வெம்பியகொடை, தவுகலகம, வெத்தாகல கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்.

கலவானை மேற்கு கிராம சேவகர் பிரிவில் பிரதான நகரிலிருந்து கிழக்கு தொலஹேன சந்தி வரையான வீதியின் இரண்டு புறங்களும்.

நுவரெலியா மாவட்டம் :
லிந்துலை காவல்துறை அதிகார பிரிவில் சென் கூம்ஸ் தோட்டம்.

களுத்துறை மாவட்டம் :
பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவில் நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவு

Related posts

நளின் பண்டாரவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை

லீப் தினத்தில் பிறந்த பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்