உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று (03) காலை அறிவித்திருந்தார்.

இதன்படி, நேற்று (02) நள்ளிரவு முதல் நாட்டில் சில முக்கிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பேஸ்புக், யூடியுப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

அச்சுத் திணைக்களத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மற்ற நடவடிக்கை